Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, May 13, 2018

Varuna Yagam......


தன்வந்திரி பீடத்தில்மழை வேண்டியும்இயற்கை வளம் பெறவும்சப்த கன்னியர் பூஜையுடன்

 வருண ஜப ஹோமம்

வளர்பிறை பஞ்சமியில் (19.05.2018) நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு வருகிற 19.05.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை குற்றாலம் அகஸ்த்தியர் ஆசிரமம் நிறுவனர் மற்றும் ஜீவநாடி வாசகர் திரு. முத்துகுமார ஸ்வாமி அவர்கள் முன்னிலையில், அக்னி நக்ஷத்திரத்தின் உஷ்ணாதிக்கம் குறையவும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், பருவமழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் வற்றாமல் இருக்கவும், அனைத்து நதிகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கடுத்து ஓடவும், மண் வளம் மழை வளத்துடன் இயற்கை வளம் பெறவும், விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடையவும், கிராம தேவதையை போற்றி ஆராதிக்கும் வகையில் தன்வந்திரி பீடத்தில் சப்தமாதாக்கள் பூஜையுடன், வருண ஜப ஹோமமும் நடைபெறுகிறது.

சப்த கன்னியர்கள் வழிபாடு பலன்கள் :

சக்தி வழிபாடு மிகவும் போற்றுதலுக்குரிய ஒரு சிறந்த வழிபாடாகும். இவை இப்பாரத தேசத்தில் அனைவராலும் ஏற்றுகொள்ளப் பட்டதாகும். பன்னெடுங்காலமாக வணங்கி வழிபட்டு போற்றப்பட்டு வரும் தெய்வ வழிபாட்டிற்கும், சக்தி தத்துவ பெருமைக்கும், தேவி ஒருத்தியே பல வடிவங்கள் தாங்கி மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும் தாய்மையின் உருவமாக கொண்டாடப்படுபவளே சப்த மாதர் எங்கிற சப்த கன்னியர் வழிபாடாகும்அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சிவ புராணத்தில் சிவபெருமாள் அஷ்ட (எட்டு) வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்தார் என்பது போல், தேவி மகாத்மியத்தில் தேவியும் அசுர சக்திகளை அழிக்க எடுத்த ஏழு உன்னத வடிவங்களை புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

சிவபெருமான் அந்தாகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டத்தை அழித்திட பிரம்ம தேவன் முதலான ஆண் தெய்வங்களின் சக்திகள் (மனைவியர்) சப்தமாதர்கள் என்றும் பெண் தெய்வங்களாகி உதவினர். இத்தேவதைகளே சப்தமாதர்கள், சப்த கன்னியர், சப்த மங்கையர் என நாம் போற்றி வழிபடுகிறோம்.

மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக் காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சப்தமாதர்களுடன் கணபதியும், வீரபத்திரமும் காணப்படுவார்கள்.

பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாக விளங்குகின்ற கிராம தெய்வ வழிபாடாகும்.

சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.

1.பிராம்மி (பிராம்மணி):

உயிர்களைப் படைக்கும் சக்தியும் படைத்தவளான இவளை வழிபட்டு குழந்தை வரம், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெறவும், ஞாபக மறதியில் இருந்து விடுதலை பெறவும், உயர் கல்வியான மருத்துவம், ..எஸ். .பி.எஸ். .எப்.எஸ். வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு எழுதும் தேர்வுகளில் வெற்றி பெறவும் பிராம்மி வழிபாடு சிறப்பாகும்.

2.மகேஸ்வரி:

இவளை வழிபட்டு,நமது கோபங்களிலிருந்து விடுதலை பெறவும், சாந்தத்தை பெற்று மகிழ்ச்சி பெறவும், மன கஷ்டங்களிலிருந்து மன அமைதி பெறவும் மகேஸ்வரி வழிபாடு சிறப்பாகும்.

3.கவுமாரி:

இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் பெற்று குடும்ப ஒற்றுமை ஏற்படவும்,  உஷ்ண சம்பந்தமான நோய்களில் இருந்து விடுதலை பெறவும், கலிகால தோஷங்கள் அகலவும், சந்ததி வளரவும் கவுமாரி வழிபாடு சிறப்பாகும்.

4.வைஷ்ணவி:

வளமான வாழ்வு பெற்று சகல சௌபாக்கியங்கள் பெற்று, மண்வளம், மழை வளம், இயற்கை நலம் பெற்று செல்வ வளத்துடன், அனைத்தையும் பெற்று வாழவும், விஷக்கடிகள் குணமாகவும், தோல் தொடர்பான பிணிகள் நீங்கவும் வைஷ்ணவி வழிபாடு சிறப்பாகும்.

5.வராகி அம்மன்:

பிரளயத்தில் இருந்து உலகை காக்கவும், இயற்கை சீற்றங்களை தடுக்கவும், பக்தர்களின் துன்பங்களை துடைக்கவும், மனித வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரவும் வராகி வழிபாடு சிறப்பாகும்.

6.இந்திராணி:

மக்களின் உயிரை காக்கவும், நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கவும், தாம்பத்ய சுகம் பெறவும் மணமாகாத ஆண்களுக்கு மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்களுக்கு மிகப் பொருத்தமான கணவனை பெறவும், சத்ரு பயம் நீங்கி அபயகரம் பெறவும் இந்திராணி வழிபாடு சிறப்பாகும்.

7.சாமுண்டிதேவி:

எதிரிகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், வாழ்க்கைக்கு தேவையான சகல பலங்கள், சொத்துக்கள், சுகங்களை பெறவும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும்உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்கள் நீங்கவும் சாமுண்டிதேவி வழிபாடு சிறப்பாகும்.

வருண பகவான் யார் :

இந்த உலகத்தின் அரசனாக வருண பகவான் இருந்து வருகிறார். உலகத்தின் உயரத்தில் இருந்து வசித்துவரும் அவர் நமக்கு அவ்வப்பொழுது மழையை பொழிந்து அருள் புரியுகிறார். இவர் எல்லையற்ற அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறர். ஆயிரம் கண்களை கொண்டு உலகத்தை கண்காணித்து காத்து வருகிறார். ஒழுக்கநெறியின் கடவுளும் இவரே எனலாம். ரிக்வேதத்தில் வருண பகவான் முக்கியமான தெய்வங்களில் ஒருவர், இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும் கடல், நீர்நிலைகள் மற்றும் மழைக்கு பொறுப்பான கடவுளே வருணன் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது. வருண பகவானின் மகன் தமிழ் முனிவரான அகஸ்தியர் என்பதால், வருணன் தமிழுக்கும் மிகவும் நெருக்கமானவர் எனலாம். தொல்காப்பியத்திலும் வருண பகவான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வருண பகவானை வேண்டி தன்வந்திரி பீடத்தில் மழை வேண்டியும் பருவமழை தவராமல் பெய்யவும், அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறயவும், விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்கவும், குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெறுகவும், இயற்கை வளம் பெறவும் சப்த கன்னியர் பூஜையுடன் வருண ஜப ஹோமம் நடைபெற உள்ளது.


இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513, வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் 9443330203. Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775


No comments:

Post a Comment