Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 28, 2018

Narasimha Jayanthi 2018 - Swathi homam...


வாலாஜாபேட்டை 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா.

(கடன் தீர்க்கும் யாகத்துடன் நோய் தீர்க்கும் ஹோமங்கள்)

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின்மேல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள்பாவிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு இன்று 28.04.2018 சனிக்கிழமை ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு,  சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், வேதபாராயணம், 108 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், ஸ்வாதி ந்க்ஷத்திர ஹோமம், ஸ்ரீ மண்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, அரிசி மாவு, போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்டது.

பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ருண ரோக நிவர்த்திக்கும், அஷ்ட ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழவும் பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203



Thursday, April 26, 2018

Maa Kali Yagam - Kalabhairavar Yagam ......

Maa Kali Yagam and Kalabhairavar Yagam 
at Sri Danvantri Peedam, Walajapet. 
Thanks to "BALAJOTHIDAM" 04.05.2018 VOL:34 ISSUE:19


Wednesday, April 25, 2018

Sri Narasimha Jayanti 2018....


ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 28.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குஸ்வாதி நக்ஷத்திர ஹோமம் மற்றும் 

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா.

(கடன் தீர்க்கும் யாகத்துடன் நோய் தீர்க்கும் ஹோமங்கள்)

நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் சித்திரை மாதம் 15ம் நாள் (28.04.2018) சனிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின்மேல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள்பாவிக்கும் சன்னதியை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். அச்சன்னதியில் கீழ்கண்டவாறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், வேதபாராயணம், 108 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், ஸ்வாதி ந்க்ஷத்திர ஹோமம், ஸ்ரீ மண்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, அரிசி மாவு, போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலுகைகள் சேர்க்கப்பட உள்ளன.

பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்வாதி நக்ஷத்திர ஹோமத்தில் கலந்துகொண்டு ருண ரோக நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்து அஷ்ட ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Lord Narasimha Jayanthi


With blessings of “Kayilai Gnanaguru” Dr. Sri. Muralidhara Swamigal, Sri Danvantri Arogya Peedam, Walajapet conducting Lord Narasimha Jayanthi special Sri Lakshmi Narasimha Yagam, Swathi Homam and special abhishekam for Sri Kurma Lakshmi Narasimhar on 28.04.2018 Saturday by 7.00 AM.

Lord Narasimha Jayanthi is another important festival among the Hindus and is celebrated on  Chaturdashi (14th day) of the Shukla Paksh. Narasimha is the fourth incarnation of it Lord Vishnu where he appeared as a man-lion that is the face was like a lion and the trunk was like a man. He had killed demon Hiranyakashipu on this day. All Lord Vishnu devotees also observe fast on this day.

It is known that Narasimha appeared during the sunset on Chaturdashi and that is why the puja is performed during those hours. The purpose of Narasimha Jayanti is to remove adharmam and to follow the path of dharmam. Dharmam is to perform correct deeds and not harm anyone.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203


Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775


Sri Vasavi Jayanthi 2018..


தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஆரியவைசியர்களின் குலதெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அவதார தினத்தை முன்னிட்டு இன்று 25.04.2018 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு நல்லெண்ணைய், சீக்காய் பவுடர், வாசனை பவுடர், மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பன்னீர், பஞ்சாமிரதத்துடன் மஹா அபிஷேகமும்  ஸ்ரீ வாசவி மூலமந்திர ஜப ஹோமமும், மங்கள கௌரி ஹோமமும் நடைபெற்றது. இதில் அனைத்து குடும்பங்களிலும் சுப காரியங்கள் நடைபெறவும், சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Monday, April 23, 2018

Mangala Chandi Homam....


ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமஸ்சண்டிகாயை

ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில்

 மங்கள வாழ்வு தரும் 

மஹா சண்டீ ஹோமம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், பொள்ளாச்சி, சாக்த ஸ்ரீ. ஜிதேஷ் ஸுப்ரஹ்மண்யம் அவர்கள் பங்கேற்று நடத்தும் மாபெரும் மங்கள சண்டி யாகம் வருகிற விளம்பி வருடம் வைகாசி மாதம் 22,23 5.6.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகம் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை  காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.

05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜை நடைபெற உள்ளது.

06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம்,நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம், பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெறும், மதியம் 12.00க்கு  சண்டிஹோம மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும் கலசாபிஷேகம் நடைபெறும்.

Mangala Chandi Homam 

at Walajapet, Sri Danvantri Peedam


Chandi Homa is a sacred fire ritual dedicated to Goddess Chandi – the fierce and powerful form of Goddess Shakti. She is the primordial energy responsible for creation, sustenance and destruction of this entire cosmos. She is the sum total of the energies of all beings in this universe. Goddess Chandi is an embodiment of power and all the divine forces, who protects you from evil forces and perfects your mind, body and soul.

BENEFITS OF CHANDI HOMAM :

Eradicate negativity and suffering, Relief from evil eye and curses, Destroy obstacles and taste success in all endeavours, Good health, wealth and prosperity, Cure from serious illnesses, Overpower enemies.

தொடர்புக்கு:
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை – 632513, வேலூர் மாவட்டம்.
PH: 04172 2300339443330203.

Bank Details :
Name : Sri Muralidhara Swamigal,
Bank Name : State Bank of India,
Account Number : 10917462439,
Branch : Walajapet,
Bank Code: 0775,
IFSC: SBIN0000775

Maa Kali Yagam - Kalabairav Yagam


தன்வந்திரி பீடத்தில் காலத்தை வெல்லும்
காளி யாகத்துடன் காலபைரவர் ஹோமம்.


உலக  நலன் கருதி கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 08.05.2018 சனிக் கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் காளி யாகத்துடன் காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் வல்லக்கோட்டையில் ஸ்ரீ பகளாமுகி பீடத்தின் பீடாதிபதி திரு. பீதாம்பர ஸ்வாமிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

காளி காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும், நீக்குவதும் இவளே. காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின் வடிவம்.. இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள். காளி யாகத்தில் கலந்துகொண்டால் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகம் நடைபெற உள்ளது.

 
Maa Kali Yagam with Kalabhairavar Homam

Maa Kali Yagam with Kalabhairavar Homam on 8th May 2018 Tuesday In our Walajapet, Danvantri Peedam, Vellore District. Conducted by Sakthasri Peethambara Swamigal, Founder of Paklamukhi Devi Temple, Chennai. Goddess Kali is known to eliminate the problems from your life. She makes you filled with enormous positivity and stamina. Goddess Kali is a kind of form of feminine when it comes in its anger mode. Though goddess Kali looks very insensitive bur actually she holds a very kind heart for their devotees and never harms them.
Benefits Of Goddess Kali Puja and Homam: All kind of negative waves go away from you, family members and home. She protects their devotee form the negative power. Goddess Kali lifts up the stamina of their devotees. Deity Kali is the stronger form of Goddess Durga. The house of devotees gets filled with the happiness. You are not disturbed by the negative power or waves. Worshipping goddess Kali cuts down all kind of impurities. The darkness goes away from your life.

For more details, Contact :

Sri Muralidhara Swamigal
( Founder and Peedathipathi ),
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet - 632513,
Phone : 04172-230033 / 09443330203

Bank Details :
Name : Sri Muralidhara Swamigal,
Bank Name : State Bank of India,
Account Number : 10917462439,
Branch : Walajapet,
Bank Code: 0775,
IFSC: SBIN0000775

Vastu Homam...


தன்வந்திரி பீடத்தில்இருவேறு ஹோமங்கள்

வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும்,வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் யாகமும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 23.04.2018 திங்கட் கிழமை வாஸ்து நாள் மற்றும் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் காலபைரவருக்கு சிறப்பு ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது.

காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், காலபைரவர் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும், காலபைரவர் வழிபாடும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. .இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Sunday, April 22, 2018

Kali Yagam - Kalabhairava Yagam


தன்வந்திரி பீடத்தில்காலத்தை வெல்லும்காளி யாகத்துடன் காலபைரவர் ஹோமம்.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 08.05.2018 சனிக் கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக  நலன் கருதி கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் காளி யாகத்துடன் காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் வல்லக்கோட்டையில் ஸ்ரீ பகளாமுகி பீடத்தின் பீடாதிபதி திரு. பீதாம்பர ஸ்வாமிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

மா காளி என்ற பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகும். காளன் என்னும் சிவபெருமானின் துணைவி என்பதால் காளி என்றழைக்கப்பட்டாள். காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் காளி என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். காளி என்பதன் பொருள் காலத்தை வென்றவள் என்பதாகும். மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும். நாம் அவளை அன்புடன் காளி என்றே அழைப்போம்.

காளி காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும், நீக்குவதும் இவளே. காளி நேர்மையின் வடிவம். நாம் நேர்மையாக இருந்தால் காளியை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்கள் வாழ்வு படிப்படியாக அழிவது நிச்சயம் என்கிறது புராணங்கள்.

காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின் வடிவம். ஆனால் நமது பாரத நாட்டில் காளியைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதாவது காளி என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காளியை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் இது உண்மையல்ல. காளி அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள். வெற்றிகளை அளிப்பவள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள். மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே. இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காளி. காளியின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும்.

இன்றைய உலக மக்கள்  தேவையற்ற ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள பலவிதமான குறுக்கு வழிகளிலும், தீய செயல்களிலும் ஈடுபட்டு அதை நிவர்த்தி செய்ய அனுபவம் இல்லாத நபர்களின் வழிகாட்டுதல்களால் பல்வேறு மக்களுக்கு தீங்கிளைக்கும் வகையில் செயல்பட்டு செய்வினை, பில்லி, சூன்யம், மற்றும் மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற விபரீதமான பூஜைகளில் பங்கேற்று பயத்திற்கு ஆளாகி வாழ்வில் அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர்.  அறியாமையினாலும்தவறான வழிகாட்டுதல்களினாலும்நரபலி வரை சென்றுவிடுகின்றனர்அத்தகைய நோய்களில் இருந்து விடுபடவும், நல்வழிப்படுத்தவும் சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக மக்களின் நலனுக்காக இந்த ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் காளிக்கே உரிய செவ்வரளி பூ, தாமரை பூ, நாயுருவி, வெண்கடுகு, கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு இந்த ஹோமம் நடைபெற உள்ளது. ஹோமத்தில் கலந்துகொள்வதினால் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513,

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203



Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775