Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 3, 2018

சனி சாந்தி ஹோமம்....

வாலாஜா தன்வந்திரி பீடத்தில்
சனி சாந்தி ஹோமத்துடன் சனி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.

சனிசாந்தி ஹோமத்துடன், சனிதோஷ நிவர்த்திபூஜை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 03.02.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்களும், உடல்நல குறைவும், விபத்துகளும், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம் ஏற்பட்டலும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையும், பித்ரு தோஷமும், திருமணத் தடையும், புத்திர பாகியம் இன்மையும் போன்ற தோஷங்களும் இடமாற்றம், வீட்டில் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனிசாந்தி ஹோமத்துடன் சனிதோஷ நிவாரண பூஜை நடைபெற்றது.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்சனி சாந்தி ஹோமம் சனிக் கிழமை, சனி ஹோரை, பௌர்ணமி மற்றும் அமாவசையில் செய்வது மிகவும் உத்தமம், சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் காளிதேவி, ஆஞ்சநேயர், யமதர்மராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். ஆஞ்சநேயர் பூஜைக்கு உகுந்த நாளான சனிக் கிழமை சனிசாந்தி ஹோமம் செய்வது மிகவும் சிறப்பு என்பதால் இன்று 03.02.2018 சனிக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற சனி சாந்தி ஹோமத்திலும் பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை பெற்று ஆயுள் தோஷம் நீங்கி அனைத்து செயல்களிலும் வெற்றிபெற பிரார்த்தனை செய்தனர்.

மேலும், ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜையில் வைத்த சனீஸ்வர ரக்ஷையுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டதுஇந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் சேர்க்கப்பட்டது.


யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment