Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 14, 2017

Sri Jayanthi 14.08.2017

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
கிருஷ்ண ஜெயந்தி விழா.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 14.08.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில் கிருஷ்ண ஜெயந்திகோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமமும் பிரார்த்தனையும் நடைபெற்றது.
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கரமும் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க பட்டது
கிருஷ்ணனுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் ஆன உஞ்சலில் நவநீத கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து மாதம்தோறும் ஸ்ரீ கிருஷ்ண ஹோமம், நவநீத கிருஷ்ண ஹோமம், இராஜகேபாலா யாகம், சந்தான கோபால யாகம் போன்ற யாகங்கள் நடைபெற்று தம்பதிகள் கைகளினால் ஊஞ்சல் தாலாட்டு, வெண்ணெய் சாற்றுதல் போன்ற வைபவங்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்று வருகிறது.
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது.
பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.
மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

அனைவரும் மேற்கண்ட பலன்கள் அடையவும், ஆரோக்யத்துடன் ஆனந்தமாக இருக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமங்களையும், கூட்டு பிரார்த்தனைகளையும் செய்து வருகிறார்.







No comments:

Post a Comment