Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 5, 2017

Hayagreevar Jayanthi 2017

தன்வந்திரி பீடத்தில்

ஹயக்ரீவர் ஜெயந்தி விழா

கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ  ஹயக்ரீவருக்கு வருகிற 07.08.2017 ஆவணி திருவோணம்ஹயக்ரீவர் ஜெயந்தி தன்வந்திரி பீடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை லக்ஷ்மி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார்.

கரிகோலமாக கொண்டு வந்து தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களுடன் பீடத்தில் விசேஷமான முறையில் ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்து, இவருடன் தேசிகரையும் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

பிரதி மாதமும், விசேஷ தினங்களிலும் இங்கு ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், வித்யா ஹோமம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும்  காட்சி கொடுத்தவர் புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாக வும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.

குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இவர் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார், சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. இவர் வெளிர் பச்சை நிறத்தில் காட்சி கொடுப்பவர்.
ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமம் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற பிரார்த்திக்கிறோம்.

வருகை புரியும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப்பொருட்கள், தேன், ஹோம ரட்சை, மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை -  632513.

Ph:  04172- 230033, 9443330203


Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
Account Number : 10917462439, Branch : Walajapet, Bank Code:0775,
IFSC: SBIN0000775

No comments:

Post a Comment