Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 11, 2017

Maha Sudarsana Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமி அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார் மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.
இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெறலாம், ஸ்ரீசுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹுர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும்

ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் மேலும் காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.என்றும் பிரார்த்தனை செய்யலாம் சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் சுதர்சன ஹோமம் பண்ணுவதால் உண்டாகிறது. இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513
PH: 04172-230033/230274/09443330203

No comments:

Post a Comment