Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam conducting Pithru Tharppanam/Thila Homam on 30.09.2016,Cell : 9443330203.

Wednesday, September 28, 2016

வினாயகபுரம் திரு. வேலு முதலியார் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தரிசனம்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பொன்னை, ஒட்டனேரி வினாயகபுரத்தில் நவக்ரஹ கோட்டை மற்றும் நவசக்தி விநாயகர் ஆலயத்தின் ஸ்தாபகர் திரு.வேலு முதலியார் அவர்கள் நேற்று 27.09.2016 மதியம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்க்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர பரிவார மூர்த்திகளையும், 468 சித்தர்களையும் தரிசனம் செய்தார். அவருக்கு தன்வந்திரி பீடத்தின் சார்பாக பூர்ணகும்பம் மரியாதை வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்வந்திரி பீடத்தில் அமாவாசை அன்று சூலினி துர்கா ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 30.10.2016 ஞாயிற்றுக் கிழமை  அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம்  நடைபெற உள்ளது.

ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசைகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது. 

இந்த ஹோமத்தில் பங்கு கொள்பவர்களுடைய, சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ, அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த ஹோமம் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று  ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775தன்வந்திரி பீடத்தில் கால சர்ப தோஷ பரிஹார ஹோமம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டைகீழ்புதுப்பேட்டையில்அ மைந்துள்ளஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 அன்று திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ பரிஹார ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும்.இந்த ஹோமத்தில் பீடாதிபதி  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று ஆசீர்வதிக்க உள்ளார். 


இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற இந்த கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் செய்வதால் பலன் கிடைக்கும்.

இந்த ஹோமத்தில், பலவகையான மூலிகைகள், பழங்கள், திரவியங்கள், பால், தயிர், பூக்கள், பட்டு வஸ்த்திரங்கள் அகிய அனைத்து பொருட்களும் உபயோகப்படுத்தப்படும். இந்த ஹோமத்தில் பங்கு பெற்று தோஷ நிவர்த்தி செய்து வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775Tuesday, September 27, 2016

தன்வந்திரி பீடத்தில் RDO திரு S. அஜய் ஸ்ரீநிவாசன் அவர்கள் தரிசனம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் (RDO) திரு.S.அஜய் ஸ்ரீநிவாசன் அவர்கள் வருகை புரிந்து தன்வந்திரி பீடத்தில் உள்ள அனைத்துசன்னதிகளையும் தரிசித்து வேப்ப மரத்திலான 11 அடி உயர ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசரை  தரிசித்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு தன்வந்திரி குடும்பத்தின் சார்பாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.